சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

Photo of author

By Savitha

சேப்பாக்கம், சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய். மைதானத்தில் அமர்ந்து விலக மறுத்த நாய்.

நாயின் அட்டகாசத்தால் தாமதமாக தொடங்கிய போட்டி.

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில். சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்திற்குள் நாய் புகுந்தது. மைதானத்தின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்த நாயை விரட்ட மைதான பராமரிப்பு ஊழியர்கள் முயற்சித்தனர்.

ஆனால், அவர்களுக்கு போக்கு காட்டிய நாய் மைதானத்திற்குள் அங்குமிங்கும் ஓடியது. சுமார் 5 நிமிடம் நாய் அங்குமிங்கும் ஓடிய நிலையில், படாதபாடு பட்டு நாயை மைதான பராமரிப்பு ஊழியர்கள் வெளியே விரட்டினர். இதனால் சற்று தாமதமாக போட்டி தொடங்கியது. நாயை வெளியே விரட்டியபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.