சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!

Photo of author

By Jayachithra

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிகரை பகுதியில் ஷமிலுதீன் என்ற ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும், இவர்கள் குழந்தை நஷிபா என்பவரை ஷமிலுதியின் தங்கை பராமரித்து வந்துள்ளார்.

அதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு அப்ஷனா என்ற பெண்ணை ஷமிலுதீன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும், இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நஷிபா தனது தந்தை மற்றும் சித்தியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மர்மமான முறையில் குழந்தை வீட்டில் இறந்துவிட்ட தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தந்தை மற்றும் சித்தி அப்ஷனா போன்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அப்ஷனா தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் நஷிபாவை பராமரிக்க தவறிவிட்டார்.

இதன் காரணமாக தாய் இல்லாததால் பெண் குழந்தை நஷிபா பல சேட்டைகள் செய்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை தொடர்ந்து அதனால் கோபமடைந்த அப்ஷனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நஷிபாவை வாயை கைகளால் பொத்தி அவரை பலமாக தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நஷிபாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்றும், காவல்துறையிடம் தப்பிப்பதற்காக தண்ணீர் குடிப்பதற்காக ஸ்லாபில் ஏறி குழந்தை தவறி கீழே விழுந்து இறந்து விட்டார் என்ற அப்ஷனா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது

குழந்தை நஷிபா பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அப்க்ஷனா அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.