பலி எண்ணிக்கையை மறைக்கிறதா சீன அரசு?

Photo of author

By Parthipan K

பலி எண்ணிக்கையை மறைக்கிறதா சீன அரசு?

Parthipan K

Updated on:

பலி எண்ணிக்கையை மறைக்கிறதா சீன அரசு?

உலகில் இதுவரை மனிதன் கண்டிராத ஒரு உயிர் கொல்லி வைரஸ் என்றால் அது கொரோனா வைரஸ் தான். கடந்த வருடம் சீனாவின் உகாண் மாகாணத்தில் தோன்றிய வைரஸ் சீனாவில் கொத்து கொத்தாக மக்களை பலிவாங்கும் எமனாக மாறியிருக்கிறது. சீனாவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் நோய் பரவலும் அசுரவேகத்தில் பரவிவருகிறது.

இந்த நிலையில், பலி எண்ணிக்கையை சீன அரசு மறைப்பதாக உலக நாடுகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பலி எண்ணிக்கை 2000 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சீனாவில் உள்ள முக்கிய தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் சீன அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், அவர்களை கைது செய்துள்ளது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு தோல்வி அடைந்துள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சீன அதிபர் தலைமறைவாக இருப்பதாக அவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பற்றி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தி ஐஸ் ஆப் டார்க்ன்ஸ் என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என சமூகவலை தளங்களில் பரவிவருகிறது.

டீன் கூன்ட்ஸ் எழுதிய இந்த நாவலில் 39 ஆவது அத்தியாயத்தில்    ”வுஹான் 400” வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. வுஹான் 400 வைரஸ் ஒரு ஆய்வகத்தில் ஆயுதமாக உருவாக்கப்பட்டதாக அந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாதான் இந்த வைரஸை உருவாக்கியதாக சீன அரசு மீது பல நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளது.

சீன அரசு அசுர வேகத்தில் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, உண்மை நிலையை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.