இந்திய மாணவர்களுக்கு அறிவுறுத்திய சீன கல்வி நிறுவனம்

Photo of author

By Parthipan K

இந்திய மாணவர்கள், படிப்பை தொடர சீனாவுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். இதுகுறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் கவலைகளை சீன வெளியுறவு அமைச்சகத்திடம் இந்திய தூதரகம் எடுத்து கூறியது.
இதையடுத்து, இந்திய தூதரகத்துக்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில்
உலக அளவில் கொரோனா சூழ்நிலை இன்னும் தெளிவற்றதாகவே இருக்கிறது. வெளிநாட்டினர் அனுமதி தொடர்பான சீன அரசின் கொள்கைகள் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மாணவர்கள் தாங்கள் படிக்கும் சீன கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
தங்கள் கல்வி முன்னேற்றத்தை பாதுகாக்கும்வகையில், ஆன்லைன் வழி கல்வியை பின்பற்றலாம். அதே சமயத்தில், சீன கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், அவர்களின் நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டும்.