உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

0
167
#image_title

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையவில்லை. அதற்குள் புதிதாக ஒரு வைரஸ் சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் அதிகளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சீனா என்றாலே நோய் தொற்று பரப்பும் நாடு என்ற எண்ணம் அனைவரின் இடத்திலும் உருவாகி விட்டது. அந்நாட்டில் இருந்து தான் உயிருக்கு ஆபத்தான பல வித வைரஸ்கள் உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறது.

தற்பொழுது உருவாகி இருக்கும் இந்த மர்ம வைரஸ் குழந்தைகளை குறிவைத்து தாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் குறித்து கடந்த அக்டோபர் மாதத்தின் நடுப் பகுதியில் இருந்து தான் உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. இது சுவாச பாதியை தாக்கும் நோயான நிமோனியா வகையை சார்ந்ததாக உள்ளது என்றும் ஆனால் இது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மர்ம காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?

**காய்ச்சல்

**இருமல்

**சுவாசிப்பதில் சிரமம்

சீனாவில் பரவி வரும் இந்த நோய்க்கு வெள்ளை நுரையீரல் நோய்க்குறி என்று உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்து இருக்கிறது.

பொதுவாக நுரையீரலை எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் கருப்பாகத் தெரியும். ஆனால் இந்த சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் அவரது நுரையீரல் எக்ஸ்ரேவில் வெள்ளையாக தெரியும். இதனால் தான் அதற்கு வெள்ளை நுரையீரல் நோய்க்குறி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது இந்த சுவாச நோய் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும் நுழைந்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த நோய் தோற்று தன்மை கொண்டவை என்பதினால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நல்ல சுகாதாரத்தை கடைபிக்க வேண்டும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.

Previous articleமூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!
Next articleஇன்னும் மூன்று நாட்களில் அடுத்த புயல் ஆரம்பம்..? தமிழ்நாடு வெதர்மென் விளக்கம்..!!