தீராத மூட்டு வலி பிரச்சனையா!!? அதை தீர்க்க விராலிமலை இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!!
நம்மில் பலருக்கும் இருக்கும் மூட்டு வலி பிரச்சனையை செய்வதற்கு இந்த பதிவில் மூலகையாக பயன்படும் விராலி இலையை வைத்து எவ்வாறு மருந்து தயாரித்து அதை பயன்படுத்தி எவ்வாறு மூட்டு வலியை குணப்படுத்துவது என்று பார்க்கலாம்.
மூட்டு வலி என்பது மூட்டு தேய்மானத்தால் ஏற்படுவது ஆகும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு வரும். ஆனால் தற்பொழுது மூட்டு வலி என்பது இளம் வயதினருக்கும் ஏற்படுகின்றது. இந்த மூட்டுவலி பிரச்சனையை சரி செய்ய நாம் வலி நிவாரண மாத்திரைகள் மருந்துகள் எடுத்திருப்போம். பலன் என்பது குறைந்த நேயம் மட்டும் தான் இருக்கும். மீண்டும் நமக்கு மூட்டு வலி வரக்கூடும். எனவே இந்த பதிவில் விராலிமலை இலையை வைத்து எவ்வாறு மூட்டுவலியை குணப்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்…
* விராலி இலை – ஒரு கைப்பிடி அளவு
* நல்லெண்ணெய் – கால் லிட்டர்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் காய் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர். அதில் நல்லெண்ணெய் கால் லிட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏற்கனவே கழுவி காய வைக்கப்பட்ட விராலி இலைகள் ஒரு கைப்பிடி அளவு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த இலைகளை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இலைகள் நன்கு குதிக்கும் பொழுது பிரவுன் கலராக மாறும். அவ்வாறு பிரவுன் கலராக மாறிய பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி ஒருநாள் முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அதன். பின்னர் இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை மூட்டுவலி இருக்கும் பொழுது சிறிதளவு எடுத்து லேசாக சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்க்கலாம். இதன் மூலம் மூட்டு வலி குறையும். இதை தொடர்ந்து பத்துநாள் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.