சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்…

0
47

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்…

அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் வீரரை வீழ்த்தி ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவில் சர்வதேச அளவிலான சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் அவர்களும் நோவக் ஜோகோவிச் அவர்களும் விளையாடினர்.

இறுதிப்போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரஸ் அவர்கள் வென்றார். அதன் பின்னர் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்களையும் 7-6(9-7), 7-6(7-4) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியாக நோவக் ஜோகோவிச் அவர்கள் 5-7, 7-6(9-7), 7-6(7-4) என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரஸ் அவர்களை வீழ்த்தி சேம்பியன் பட்டம் வென்றார். சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வீராங்கனை கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீராங்கனை கரோலினா முச்சோவாவ் அவர்களை வீழ்த்தி சேம்பியன் பட்டம் வென்றார்.