Cockroach: வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் இப்படி செய்யுங்கள்..!! அதன் தொல்லைக்கு நிமிடத்தில் தீர்வு கிடைத்துவிடும்!!

Photo of author

By Divya

Cockroach: வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் இப்படி செய்யுங்கள்..!! அதன் தொல்லைக்கு நிமிடத்தில் தீர்வு கிடைத்துவிடும்!!

வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும்.
காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு கட்டுவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

**கற்பூரம்

**எலுமிச்சை

**வினிகர்

**ஸ்ப்ரே பாட்டில்

செய்முறை…

ஒரு உரலில் 1 கட்டி கற்பூரத்தை சேர்த்து இடித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி வினிகர், இடித்த கற்பூரம் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் இதை நன்கு மிக்ஸ் செய்து வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலம் அதன் தொல்லை சில நிமிடங்களை முடிவுக்கு வரும்.

புதினா இலை சாற்றை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்வதன் மூலம் வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.

*பிரியாணி இலை வாசனை கரப்பான் பூச்சிக்கு அறவே பிடிக்காது. இதை பொடி செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விடலாம்.