வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை? அப்போ மண்ணெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரு இரவில் தீர்வு கிடைக்கும்!!

0
68
#image_title

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை? அப்போ மண்ணெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரு இரவில் தீர்வு கிடைக்கும்!!

வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு கட்டுவது நல்லது.

வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்கள்:-

*சுத்தம் செய்யப்படாத கழிவறை

*சுத்தம் செய்யப்படாத குளியலறை

*சுத்தம் செய்யப்படாத சமையலறை

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*மண்ணெண்ணெய் – 100 மில்லி

ஸ்ப்ரே பாட்டில் – 1

செய்முறை:-

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 100 மில்லி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்தால் நிமிடத்தில் கரப்பான் பூச்சி தொல்லை நீங்கும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*ஊதுபத்தி – 1

*கற்பூரம் – 2

*ஸ்பிரேயர் – 1

செய்முறை:-

ஒரு பவுலில் பூஜைக்கு பயன்படுத்தும் ஊதுபத்தி சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 அல்லது 2 துண்டு கற்பூரம்(சூடம்) சேர்க்கவும்.

பின்னர் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளிப்பதன் மூலம் அதன் தொல்லை முழுமையாக நீங்கும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*கிராம்பு (இலவங்கம்) – 10

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

ஒரு உரலில் 10 கிராம்பு (இலவங்கம்) சேர்த்து இடித்து தூள் செய்து கொள்ளவும். உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் போது அரைத்து பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் இதில் கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு கிடைத்து விடும்.