லிட்டர் கணக்கில் சேமித்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய் நீண்ட காலத்திற்கு கெடாமல் இருக்க சூப்பர் ஐடியா!!
நம்மில் பலர் தேங்காய் எண்ணெயை சமையலுக்கும், தலை முடி ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்ணெய் அதிக நறுமணத்துடன் இருப்பதினால் மக்கள் இதை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தேங்காயை காயவைத்து எண்ணெய் ஆட்டி பயன்படுத்துவார்கள். சிலர் எண்ணெய் மில் மற்றும் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர் இதை லிட்டர் கணக்கில் வாங்கி தேக்கி வைத்து பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சிலர் உரிய பராமரிப்பும் செய்ய தெரியாத காரணத்தினால் அவ்வப்போது வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
நீங்கள் எத்தனை லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்கினாலும் அவை கெடாமல் இருக்க சில வழிகளை கடைபிடித்தால் நீண்ட காலத்திற்கு ப்ரஸாக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாது.
தீர்வு 1:
முடிந்தளவு தேங்காய்களை வாங்கி காயவைத்து எண்ணெய் ஆட்டி பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அவ்வாறு மில்லில் தேங்காய் எண்ணெய் ஆட்டி வந்ததும் அதனை வீட்டில் நல்ல வெயில் படும் இடத்தில் வைத்து ஈரப்பதம் இல்லாத சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமித்து பயன்படுத்துங்கள்.
வெயிலில் சில மணி நேரம் வைத்து சேமித்து பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்கும். அதேபோல் கெட்ட வாடை(சிக்கு) வீசாமலும் இருக்கும்.
தீர்வு 2:
நீங்கள் ஆட்டி வந்த தேங்காய் எண்ணெயை ஈரப்பதன் இல்லாத உலர்ந்த இடத்தில் சேமித்து வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
தீர்வு 3:
தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு கல் உப்பை போட்டு வைப்பதன் மூலம் தேங்காய் எண்ணெய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்.
தீர்வு 4:
அதேபோல் தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு மிளகு போட்டு வைப்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.