பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..?

0
156
#image_title

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..?

தமிழக அரசியலில் சமீப காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை காண முடிகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட அரசியல் காய்களை நிதானமாக நகர்த்தி திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை ஆட்டம் காண வைத்து வைக்கிறார். திமுக மற்றும் பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தவர்கள் கட்சியின் நடவடிக்கை பிடிக்காமல் அதிமுகவில் இணைவது தொடர்ந்து வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் தங்கள் கட்சியை நிலைநாட்ட பாஜக போராடி வரும் நிலையில் மக்கள் மத்தியில் மோடிக்கான எதிர்ப்பு அலை தொடர்ந்து வீசுவதால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிட போகிறது? எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போகிறது? என்ற ஆவல் அனைவரிடமும் இருக்கிறது.

மத்தியில் பாஜக செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தாலும் தமிழக்தில் அதன் பருப்பு வேக வில்லை என்பது தான் நிதர்சனம். ஒவ்வொரு முறை தேர்தலும் அவர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த பாஜக, அதிமுகவின் ஆதரவால் கடந்த சட்ட மன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகி கொள்கிறது என்ற அறிவிப்பு மேலிட மற்றும் தமிழக பாஜகவை அதிர வைத்தது என்றே சொல்லலாம். இந்த கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று அனைவரும் அறிந்த ஒன்று.

கூட்டணி முறிவிற்கு பிறகு கடும் சிக்கலில் இருக்கும் பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திக்க போகிறது என்பதை கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

இப்படி பாதி கிணற்றில் தத்தளித்து வரும் தமிழக பாஜக மிகவும் வீக்காக இருக்கிறது என்பதை அறிந்த மேலிடம் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவர முடிவெடுத்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் கோவை பாஜக மாநகர் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்த பாலாஜி உத்தம ராமசாமியை அந்த பதவியில் இருந்து விலக வைத்துள்ள பாஜகவின் உட்கட்சி விவகாரம்.

இவர் அண்ணாமலையின் வலது கையாக செயல்பட்டு வந்த நிலையில் இந்த பதவியில் இருந்து அவரை மாற்ற பல்வேறு காரணங்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த பாலாஜி உத்தம ராமசாமி பாஜவில் இணைந்த குறுகிய காலத்தில் மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்க முக்கிய மூளையாக செயல்பட்டவர் அண்ணாமலை தான்.

தமிழக பாஜக தலைவரின் ஆதரவு பாலாஜி உத்தம ராமசாமிக்கு இருந்த காரணத்தினால் அவர் மற்ற மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார். பாஜகவின் முக்கிய நிர்வாகிகளிடம் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த இவரை அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேரடியாகவே எச்சரித்து இருக்கின்றனர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி பணிகளில் மெத்தனம் காட்டி வந்த பாலாஜி உத்தம ராமசாமியை அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து தூக்கியது மேலிடம். காரணம் பாலாஜி உத்தம ராமசாமியின் செயலால் தமிழக பாஜக வீக்காக இருக்கிறது என்பதை உணர்ந்து மேலிடம் இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இவர் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார் என்றும் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக ராஜேஷ் குமார் புதிதாக நியமனம் செய்யப்படுவார் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பாஜகவின் உட்கட்சி மோதல் போக்கு தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleஉருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
Next articleஉங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!