சமீபத்தில் Behind wood கொடுத்த அவார்டு திருப்பி தருவதாக பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட கருத்திற்கு சக போட்டியாளரான பிக்பாஸில் புகழ்பெற்ற சனம் செட்டி கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்ற ஆரீ, பாலாஜி முருகதாஸ், ஆஜித், ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா ,ஷிவானி நாராயணன், சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், அனிதா, சோம்சேகர், ரியோ, ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆரி முதலிடத்தையும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும் பெற்றார்.
மிகவும் சர்ச்சைக்குரியவராக இருந்த பாலாஜி முருகதாஸ் அனைவரிடமும் விவாத வார்த்தைகளை பயன்படுத்தி பிக்பாஸில் இருந்தபொழுது பலரின் பேச்சுக்கு ஆளாக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு இரண்டாவது பரிசு கொடுக்கப்பட்டது மக்களிடையே பெரும் அதிருப்தி அடைந்தது உண்மையே.
சமீபத்தில் Behind wood சார்பாக பிக்கஸ்ட் சென்சேஷனல் ரியாலிட்டி டெலிவிஷன் என்ற பட்டம் பாலாஜி முருகதாசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பட்டத்தை திருப்பி கொடுக்கப் போவதாக பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு, அவர் கூறுகையில் , ரிவ்யூ என்ற பெயரில் மற்ற போற்றியாளர்களை பற்றி தவறாக பேசாதீர்கள். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும். ரிவ்யூவர்ஸ் எல்லாம் காந்தியோ மதர் தெரசாவை இல்லை என்று தான் பேசினேன். ஆனால் அந்த வீடியோவை அவர்கள் ஒளிபரப்பவில்லை என்று கூறி தன் மேடையில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வீடியோவை வெளியிடாத காரணத்தால் அவார்டை திருப்பி கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்த பாலாஜியின் பதிவுக்கு அனைவருக்கும் பிக்பாஸில் மிகப்பிடித்த போட்டியாளரான சனம் ஷெட்டி பதிலளித்துள்ளார். அதில் சனம் ஷெட்டி ” என்னையும் இல்லாத பெண்களின் கேரக்டரை பற்றி பேசியபோது போட்டியாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வில்லையா? அவ்வாறு தவறான வார்த்தைகளைப் பேசும் பொழுது என்னை அசிங்கப் படுத்திய பொழுதும் இளம் பெண்களை பற்றி நீங்கள் யோசித்தீர்களா? காணாமல் போன உங்களின் இரண்டு நிமிட பெருமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
Here is a glimpse of my behindhoods speech.
If you can’t take it don’t give it
Live let live 🙏🏼 pic.twitter.com/yCJtjrR7mQ— Balaji Murugadoss (@OfficialBalaji) June 1, 2021