“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!  

Photo of author

By CineDesk

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை திரைப்பிரபலங்களும் ரசிப்பது இதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும். இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் தங்களது சமையல் திறமைகளை காண்பிப்பதற்கான ஒரு நிகழ்ச்சியாகும்.

இதில் பங்கேற்கும் சமையல் கலைஞர்களுடன் கோமாளியாக வருபவர்கள் செய்யும் சேட்டைகளே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த நிகழ்ச்சியின் பெரும் வெற்றியை தொடர்ந்தே தற்போது  நான்காவது சீசன் வரை இந்த நிகழ்ச்சி வந்துள்ளது.

ஆனால் கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று சுவாரஸ்யம் குறைந்ததாகவே உள்ளது. “குக் வித் கோமாளி”யில் கோமாளியாக வரும் மணிமேகலையின் நகைச்சுவை மக்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றது. ஆனால் சில சொந்த காரணங்களினால் குக் வித் கோமாளி” நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை பாதியிலேயே விலகி விட்டார். இதனால் விஜய் டிவியின் டிஆர்பி சற்று சரிந்தது.

இந்த சீசனில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி பி முத்து ஒரு கோமாளியாக களமிறங்கினார். அவர் தன் கோமாளித்தனத்தினாலும், நகைச்சுவை பேச்சினாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஜி பி முத்துவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், மணிமேகலையை தொடர்ந்து ஜி பி முத்துவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளார். இடைவிடாத ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பதால் அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் விஜய் டிவியின் டிஆர்பி மேலும் சரிந்து விடும் என்ற காரணத்தினால் வேறு முக்கியமான பிரபலத்தை கோமாளியாக களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது.