பிரெட் ஆம்லெட்

Photo of author

By Kowsalya

பிரெட் ஆம்லெட்‏

செய்ய தேவையான பொருட்கள்:

1. முட்டை இரண்டு

2. ப்ரெட் துண்டுகள்

3. சீஸ் துண்டுகள்

4. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி

5. வெங்காயம் 2

6. பச்சை மிளகாய்

7. கொத்தமல்லி இலைகள்

8. எண்ணெய்

9. . உப்பு

10. மிளகு

சட்னி செய்ய:

1. கொத்தமல்லி இலைகள்

2. புதினா இலைகள்

3. பச்சை மிளகாய்

4. அரை பழ எலுமிச்சை சாறு

செய்முறை:

1. முதலில் புதினா சட்னி செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் கொத்துமல்லி ஒரு கையளவு, புதினா ஒரு கையளவு, பச்சை மிளகாய் ஒன்று, உப்பு, எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு அரைத்துக்கொள்ளவும்.

2. ஒரு பெரிய பௌலில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 3 ஸ்பூன், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து விடவும். கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

3. இப்பொழுது அடுப்பில் தவாவை வைத்து எண்ணையை ஊற்றி அனைத்து பக்கத்திலும் தடவிவிட்டு கலந்து வைத்திருக்கின்ற முட்டை கலவையை ஊற்றி அனைத்து பக்கமும் பரப்பி விடவும்.

4. இதில் இரண்டு பிரட் துண்டுகளை வைக்கவும்.

5. ப்ரெட் துண்டுகளின் மீது அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி புதினா கலவையை அனைத்து பக்கத்திலும் படும்படி தடவி விடவும்.

6. அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து  கொள்ளவும்.

7. இரண்டு பிரட் துண்டுகளையும் திருப்பி மடக்கிக் கொள்ளவும்.

8. பிரட் ஆம்லெட் தயார்.

9. சாஸ் வைத்து சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான இந்த பிரெட் ஆம்லெடை‌‌ வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.