இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் உலக தலைவர்கள்!

0
167

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அந்த நாடுகளில் மக்கள் பொது இடங்களில் கூட்டம் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாடுகளின் சுகாதாரத்துறை மக்களை தொடர்ந்து பாதுகாப்போடும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கோரோனா அறிகுறி இருந்ததாக தெரிகிறது, இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் சார்லஸுக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்தச் செய்தி உலக தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleசாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது : காவல்துறை அதிரடி நடவடிக்கை!
Next articleதேனி காட்டுப்பகுதியில் நடந்த திடீர் தீவிபத்து! மூன்று குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம்!