இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

Photo of author

By Parthipan K

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் உள்ள ‘சாய்’ பயிற்சி மையத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு வந்துள்ளனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன.
இதில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கிரிஷன் பஹதூர் பதாக் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 வீரர்களும் ‘சாய்’ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.