பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா?

Photo of author

By Parthipan K

நெய்மர் விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது. பெயர்களை வெளியிடவில்லை என்றாலும் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.