ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் கொரோனா

Photo of author

By Parthipan K

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் கொரோனா

Parthipan K

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நேற்று ஆக அதிகமாக 41 பேர் கிருமித்தொற்றால் இறந்தனர். இருப்பினும் புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மாதங்களில் ஆகக் குறைவாகப் பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில், 73 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. சென்ற மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு ஆகக் குறைவான எண்ணிக்கை அது. மாநிலத் தலைநகர் மெல்பர்னில் (Melbourne) 6 வாரக் கடுமையான முடக்கம் இன்னும் நடப்பில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் 26,000பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 650 பேர்இறந்தனர்.