அதிபர் அலுவலகத்தில் கொரோனா

Photo of author

By Parthipan K

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 2.75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலிய அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி வால்ட்டர் சோஸா பிராகா நெட்டோ (Walter Souza Braga Netto), கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7-ஆவது பிரேசிலிய அமைச்சர் ஆவார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை சீரான நிலையில் உள்ளதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தே அவர் பணிகளைத் தொடர்வார் எனக் குறிப்பிடப்பட்டது. பிரேசிலிய அதிபர் ஜெயிர் போல்சோனாரோவும் (Jair Bolsonaro) கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.