இந்த நாட்டிலும் அதிகரிக்கும் கொரோனா?

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது.

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.87 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2,868 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,87,959 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்குபலியானவர்களின்  எண்ணிக்கை 4000 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.