இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் கொரோனா

Photo of author

By Parthipan K

இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் கொரோனா

Parthipan K

சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய இழப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி வருகிறது மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது. 1 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.