அமெரிக்காவை மிரட்டி வரும் கொரோனா

Photo of author

By Parthipan K

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது