புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

Photo of author

By Parthipan K

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

Parthipan K

ருய்லீ என்ற  நகரை சீனா முடக்கியுள்ளது இந்த ருய்லீ நகர் சீன மியன்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. சிறிய அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகர மக்களை வீட்டில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். நகருக்குள் செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியில்லை. அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மியன்மாரில் இருந்து ருய்லீ நகருக்கு நோய் பரவியதாய்ச் சீன அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.