மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.
மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் சுமார் 55.63 கோடி மக்களை பாதிப்புக்குள்ளகின்றார்கள். இதன் படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையாக 55,63,09,899 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மெதுவாக 53, 06,73,799 பேர் குணமடைந்து வீடு திருப்பினார்கள். இதை தொடர்ந்து மேலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,92,71,708ஆக பதிவாகியுள்ளது. இதனால் 63,64,392 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.
கொரோனா தொற்றால் அதிகம் பரவிய நாடுகளாக ஆப்ரிக்கா,இந்தியா,பிரான்ஸ்,ஜெர்மனி,பிரேசில் ஆகிய நாடுகளில் மிக வேகமாக பரவிவருகிறது.மேலும் இங்கிலாந்து,இத்தாலி, ரஷியா,தென்கொரியா,துருக்கி,ஸ்பெயின்,வியட்நாம்,ஜப்பான் போன்ற நாடுகளில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது.