மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

Photo of author

By Parthipan K

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  தகுதி பெற்று  இந்திய அணிகளின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாக  சொந்த ஊர்ருக்கு புறப்பட்ட  இந்திய ஆக்கி அணி வீரர்கள் தேசிய பயிற்சி முகாம் மீண்டும் வருகிற 20-ந் தேதி நடக்க  இருப்பதால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரத்தில் பெங்களூருக்கு வந்தனர். பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. அந்த 5 வீரர்களும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்திய ஆக்கி அணியின் மற்றொரு வீரரான மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்து இருக்கிறது. இந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.