பிசிசிஐ அலுவலகத்திலும் ஒருவருக்கு கொரோனாவா?

Photo of author

By Parthipan K

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ-யின் மருத்துவக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைதான். ஆனால் சீனியர் மருத்து அதிகாரியால் எந்த பிரச்சினையும் இல்லை. அறிகுறி இல்லாத கொரோனா தொற்றுதான். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் யாருடன் தொடர்வில் இல்லை. ஐக்கிய அரபு அமீரகம் பயணம் போது அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம். அவர் கண்காணிப்பில் உள்ளார். அடுத்த சுற்று பரிசோதனையின் போது அவர் குணமடைந்துவிடுவார். அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ,-க்கு தகவல் கிடைத்துள்ளது.