அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா

Photo of author

By Parthipan K

பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதன் காரணமாக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி பிரதீப் தாஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. ராமர் கோவிலில் தினசரி பூஜைகளை செய்யும் முக்கிய 4 பூசாரிகளில் இவரும் ஒருவர். இதனையடுத்து பூசாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்குமுன்பு பத்திரிகையாளர்களுக்கு தாஸ் பேட்டி அளித்தார். இதனால் தங்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளனர். இதுதவிர அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 16 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.