ஜமைக்காவின் உசேன் போல்ட் உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்தவர். ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து உசைன் போல்டு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சமூகவலைதளத்தில் கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.