தனது ஊரை காக்க எல்லையில் அமர்ந்த எல்லைச்சாமி..!! கொரோனா பாதுகாப்பில் வியக்கவைத்த இளம்பெண்.!!

0
147

தனது ஊரை காக்க எல்லையில் அமர்ந்த எல்லைச்சாமி..!! கொரோனா பாதுகாப்பில் வியக்கவைத்த இளம்பெண்.!!

கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் ஊரை காக்க ஊர் எல்லையில் பாதுகாப்பு வேலி அமைத்து முக கவசத்துடன் எல்லைச்சாமி போல் ஒரு இளம்பெண் அமர்ந்துள்ள சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகளவில் 47 ஆயிரம் பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் என்ற நச்சுக்கிருமி தொடர்ந்து மக்களிடையே தீவிரமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மருத்துவர்களும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தி தீவிர கண்காணிப்பில் அரசு ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களும் பலர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலும் சிலர் சாலைகளில் நடமாடி வருகின்றனர்.

இதனையடுத்து மற்றவருக்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தியது. அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றாலும் அவசரமாக வெளியில் சென்றாலும் இன்னொருவருடன் கைகுலுக்க வேண்டாம் என்றும் மீட்டர் இடைவெளிவிட்டு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. பலரும் அரசின் உத்தரவை மதிக்காமலும் கொரோனாவின் அச்சத்தை உணராமலும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மதனபுரம் என்ற கிராமத்தின் ஊர்தலைவராக இருப்பவர் அகிலா (23). இவர் தனது ஊர் மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் விதமாக ஊருக்கு உள்ளே செல்லும் பாதையை முள் வேலிகளை போட்டு அடைத்து அங்கேயே நாற்காலியுடன் முக கவசங்களை கட்டிக்கொண்டு அமர்ந்துள்ளார். வில்லேஜ் ஆர்மிபோல ஊர் எல்லையில் தலைவர் அமர்ந்திருப்பதை பார்த்து யாரும் ஊருக்குள் இருந்து வெளியேவும், வெளியில் இருந்து உள்ளேயும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து சொந்த கிராம மக்களின் உயிரை அகல்யா காப்பாற்றி வருகிறார்.

மேலும், எங்கள் கிராமத்தில் 1,600 பேருக்கு வசித்து வருகிறோம், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட அது பலருக்கு பரவி விடும் என்று கூறி, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Previous articleடெல்லி தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டோர் மருத்துவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து அட்டகாசம்!
Next articleகொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?