கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

0
126

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

கொரோனா பாதிப்பின் காரணமாக நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகளவில் ஆதிக்கம் செய்து வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அமல்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகளவில் 47 ஆயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருந்த பல்வேறு போட்டிகளுக்கு தற்காலிக தடை அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கிரிக்கெட் வாரியத்திற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து இந்தி கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் குறைக்கப்படலாம் என்கிற தகவல்களும் வெளியாகின. மார்ச் கடைசியில் ஆரம்பிக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகளும் தற்காலிக தடையில் இருப்பதால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகம் சார்பில் விளக்கம் தெரிவிக்கையில்; இந்திய கிரிக்கெட் அணியினரின் சம்பளத்தை குறைப்பது தொடர்பான எந்தமாதிரியான முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலுக்கு எடுக்கப்பட்டும் முடிவுகள் அனைவரின் நலம்சார்ந்தே எடுக்கப்படும் என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சில மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பள பிடித்தம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Jayachandiran