சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..??
சென்னையில் கொரோனா தீவிரமாக பாதித்த 8 இடங்களை கட்டுபடுத்தப்பட்ட இடங்களாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவிய கொரோனா தொற்றுக் கிறுமியால் தினசரி அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்களிடையே அச்சம் தொடர்ந்து காணப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 24 ஆம் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியது. இதனையடுத்து இந்திய மாநில எல்லைகள் மூடப்பட்டு, தமிழகத்தில் மாவட்ட எல்லைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. மற்ற நாடுகளை விட இந்தியாவில் முன்னெச்சரிக்கையாக முடிவெடுக்கப்பட்டதால் உயிரிழப்பு குறைவு என்றும் கூறலாம்.
இந்நிலையில் தமிழகத்தில் 309 பேர் கொரோனா பாதித்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள குறிப்பிட்ட 8 இடங்களை தமிழக போலீசார் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளனர். எண்ணூர், புளியந்தோப்பு, தண்டையார் பேட்டை, முத்தியால் பேட்டை, நேநாஜி நகர், புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.