தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது! குளிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமாம்!

Photo of author

By Jayachandiran

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது! குளிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமாம்!

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்றுமட்டும் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதையடுத்து மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என்று மோடி அறிவித்தார். இந்தியாவில் மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 பேர் இருந்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் 56 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தமிழக பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வெயில் காலத்தில் இருக்கும் கொரோனாவின் தாக்கத்தை விட வருகின்ற குளிர் காலத்தில் மிக தீவிரமான பாதிப்பு இருக்கலாம் என்றும் ஆய்வு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இச்செய்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.