மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை! அமலுக்கு வந்த அவசர சட்டம்.!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் இரவும், பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பணியாற்றும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் PEE என்று சொல்லக்கூடிய உடைகளை அணிந்து கடும் சிரமத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனை அணிவதற்கே குறிப்பிட்ட நேரம் தேவைப்படும் ஆகவே பணிக்கு முன்னதாகவே அதிக நேரம் ஒதுக்கி இந்த ஆடையை அணிந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து உயிர் இழக்கும் மருத்துவர்களின் நிலை மோசமான சூழலாக இருந்து வருகிறது. சில இடங்களில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள் மீது தாக்குதலும் நடத்தப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதை தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மருத்துவர்களுக்கான அவசர பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் படி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டால் சில மணி நேரங்களில் தாக்குதல் நடத்தியவர் ஜாமீனில் வெளியே வராதபடி கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறைதண்டனை 5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறையில் அமல் ஆகிறது. இது தொடர்பான அறிவிப்பும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.