மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி!

Photo of author

By Jayachandiran

சென்னை:

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை நிர்வாக அதிகாரிகள் பணிபுரியும் அலுவலகத்தில் 7. நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்பின்னர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுடன் பணியாற்றிய பிற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தியதோடு அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. விமான நிலையத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த 7 நபர்கள் பணி செய்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.