தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Photo of author

By Ammasi Manickam

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிருந்து சென்னைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டதாகவும், மேலும் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையுடன், கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

https://twitter.com/Vijayabaskarofl/status/1240250048639668224?s=20

ஏற்கனவே தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஓமனில் இருந்து திரும்பிய போது கொரோனா வைரசாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தான் அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன் மூலமாக தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 152 ஆக உயர்ந்துள்ளது.