சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

0
240

 

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!!

கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் பகுதிகளில் தல இரண்டு பேருக்கும், காடையாம்பட்டி,நங்கவள்ளி, மகுடஞ்சாவடி, சங்ககிரி, தலைவாசல், வாழப்பாடி மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளார்.

மேலும் சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு வந்த 3 பேர், கிருஷ்ணகிரி, நாமக்கல்,ஈரோடு பகுதிகளில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்படைந்தார்கள். இதனைத் தொடர்ந்து 301 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த 38 பேருக்கு முழுமையாக குணம் அடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளார்கள்.

Previous articleஅதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!!
Next articleநித்யாவை பார்த்ததும் மயங்கி போயிட்டேன்! என்னை ஈர்த்த மன்மதன்! நடிகையின் காதல் மோகம்!!