மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

Photo of author

By Parthipan K

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில் தென் கொரியாவில் நேற்று புதிதாக 113 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  கடந்த மூன்று மாதங்களில் பதிவான  அதிக எண்ணிக்கை இதுவாகும். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 86 பேர், வெளிநாடுகளிலிருந்து தென் கொரியா சென்றவர்கள். ஈராக்கிலிருந்து தாயகம் திரும்புவோரும், புசான் நகரில் கரையொதுங்கிய ரஷ்ய மீன் பிடிப் படகைச் சேர்ந்த கடலோடிகளும் அவர்களில் அடங்குவர்.

பயணிகள், கொரோனா கிருமி தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை இணைப்பது குறித்து, சோல் பரிசீலித்துவருகிறது. தென் கொரியாவில் மொத்தம் 14,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.