இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

0
81

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் மற்றும் தங்க நகை கடன்களை வழங்கி வருகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை விட குறைந்த சதவிகித வட்டி வசூலிக்கப்படும் என்பதால் தங்க நகைக்கடன் வாங்க பலரும் வருகின்றனர்.

இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை வெளியில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, விசாரித்த அதிகாரிகள் இதில் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கூட்டுறவு நிறுவனங்கள் அடகு கடை நடத்துபவர்களுக்கு கடன்கள் வழங்க கூடாது என்றும். அதை மீறி வழங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.