பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி!
தற்பொழுது தமிழகம் முழுவதும் திமுகவின் ஊழல் குறித்த பேச்சு தான் அதிகம் இருக்கிறது. மக்கள் பணத்தில் ஊழல் செய்து பல கோடி மதிப்பில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகின்றனர்.
திமுக என்றால் ஊழல், நில அபகரிப்பு, கொள்ளை கூட்டும் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. கடந்த ஜூன் மாதம் பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதன் பின்னர் மணல் கொள்ளை வழக்கில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் சிக்கி இருக்கிறார். இவரை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. இவ்வாறு திமுக அமைச்சர்களின் ஊழல் ஒவ்வொன்றாக அம்பலமாகி வந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்து உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து குவித்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று அறிவித்து 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஊழல் வழக்கில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிறை செல்வதால் திமுக பீதியில் உறைந்து இருக்கிறது.
அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் அண்ணாமலை அவர்கள் பொன்முடிக்கு அடுத்த 10 அமைசர்களின் ஊழல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஊழல் வழக்கில் பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி இருப்பதை பா.ஜ.க வரவேற்கிறது என்றார்
மேலும் பொன்முடியின் இன்னொரு ஊழல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். திமுகவின் பொன்முடி, துரை முருகன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கேன்.என்.நேரு, எம். ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், ரகுபதி, கே.ஆர்.பெரிய கருப்பன், அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மீதான ஊழல், சொத்து குவிப்பு வழக்கு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.
பொன்முடிக்கு காலம் கடந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே விரைவாக மற்ற அமைச்சர்களின் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வரும் என்று நம்புகிறேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.