கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு!

0
156
#image_title

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து பெங்களூரு மாநிலம் மங்களூருவிற்கும், கேரள மாநிலம் கொல்லத்திற்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாக தற்பொழுது தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 25ம் தேதி வருடந்தோறும் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் வரும் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து இன்றும்(டிசம்பர் 23) மற்றும் டிசம்பர் 30ம் தேதியும் இரவு 11.20 மணிக்கு மங்களூருவிற்கு 06129 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது. அதே போல மறு மார்க்கமாக மங்களூரில் இருந்து டிசம்பர் 25ம் தேதி திங்கட்கிழமை மற்றும் ஜனவரி 1 திங்கட்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை 9.30 மணிக்கு 06130 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது.

மேலும் சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இன்று(டிசம்பர்23) மற்றும் டிசம்பர் 30ம் தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு 06119 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் இயக்கப்படுகின்றது. அதே போல மறுமார்க்கமாக கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு நாளை(டிசம்பர்24) மற்றும் டிசம்பர் 31ம் தேதிகளில் காலை 10.45 மணிக்கு 06120 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் இயக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.