கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய வீட்டின் முன்பு மரங்கள் நட்டு வைத்துள்ளார்.
இவ்வாறு மரங்களை சாலையில் வைக்கக்கூடாது எனவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர் மாலதி கூறி வந்துள்ளார்.அதன் காரணமாக கவின்சிலர் மாலதி மற்றும் தொழிலாதிபர் சுபாஷ்ற்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கவுன்சிலர் மாலதி நைட்டி அணிந்திருந்த நிலையில் சுபாஷ் அவரத்தின் வீட்டிற்கு முன்பு வைத்திருந்த சிறிய மரத்தை பிடுங்கி எரிந்துள்ளார்.அதனையடுத்து அவர் கோபத்தில் சவாலாக நான் தான் செடியை பிடுங்கினேன்..யார் கிட்ட வேணாலும் போய் சொல்லு என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
மாலதி பேசியதை அங்கிருந்த சுபாஷ் தரப்பினர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் இவர் இவ்வாறு செய்வது நியாயமா என கேட்டுள்ளனர்.அதனையடுத்து சுபாஷ் தரப்பினர் கவுன்சிலர் மாலதி அவர்களின் கார் தினமும் சாலையில் தான் நிறுத்தி செல்கின்றனர்.அதனால் ஏற்படாத போக்குவரத்து இடையூறு சிறிய செடியினால் ஏற்படுமா என கேள்வி எழுப்பினார்கள்.இந்நிலையில் கவுன்சிலர் மாலதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.