மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….!

Photo of author

By Vijay

மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….!

Vijay

மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….!

தனக்கு மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் குற்றப்பரம்பரை, பட்டத்து யானை போன்ற பல நாவல்களை எழுதியவர் தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவரின் தோற்றம் மற்றும் கம்பீரமான குரல் காரணமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மதயானைக் கூட்டம் என்ற படம் மூலம் வேல ராமமூர்த்தி திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து கொம்பன், கிடாரி, சேதுபதி போன்ற படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட வேல ராமமூர்த்தி தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாக வலம் வருகிறார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் வேல ராமமூர்த்தி தான் சிறந்த வில்லன். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வேல ராமமூர்த்தி மிகவும் டெரரான வில்லனாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி பேட்டியில் பங்கேற்ற அவரிடம் நீங்கள் காதல் திருமணம் செய்து கொண்டீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இல்லை. சொந்தத்தில் தான் திருமணம் செய்துள்ளேன. நான் எனது சொந்த மதினி மகளை அதாவது எனக்கு மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்துள்ளேன. எங்க ஆளுங்கள்ல அக்கா மகளை கல்யாணம் பண்ண மாட்டாங்க” என கூறியுள்ளார்.