தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு!

0
143
#image_title

தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு!

ஏழைகளின் பசு என்று கூறும் அளவிற்கு மிகவும் சாதுவான பிராணிகள் தான் ஆடுகள். ஆனால் ஆடுகளால் ஒரு தீவில் இருக்கும் மக்கள் நாள்தோறும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இத்தாலியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக மிகவும் அழகாக அமைந்துள்ள தீவு தான் அலிக்குடி தீவு. இந்த தீவில் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையே 100 பேர் தான். இந்நிலையில் இந்த மக்களுக்கு தற்போது ஆடுகளால் புதிய தொல்லை ஏற்பட்டுள்ளது.

அதாவது இந்த தீவை சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆடுகளை இங்கு கொண்டு வந்து விட்டாராம். அந்த ஆடுகள் தற்போது இனப்பெருக்கம் செய்து அதிகமாகி விட்டதாம். எந்த அளவிற்கு அதிகம் என்றால் 100 பேர் மக்கள் தொகை கொண்ட தீவில் தற்போது 600 ஆடுகள் உள்ளதாம்.

இந்த ஆடுகளை யாரும் வளர்க்கவில்லையாம். அவைகள் தானாகவே அந்த தீவின் பூங்காக்கள், பொது இடங்களில் சுற்றி திரிந்து அங்குள்ள செடிகளை மேய்ந்து அவைகளின் இனத்தை பெருக்கி வருகிறதாம். இதனால் அந்த தீவு மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிட்டது.

எனவே அந்த தீவின் மேயர் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். அதன்படி அவர் அலிகுடி தீவு மக்கள் அல்லாமல் மற்ற பகுதி மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களிடம் படகு இருந்தால், போதும் யார் வேண்டுமானாலும் ஆடுகளை எடுத்து செல்லலாம். உங்களுக்கு ஆடு வளர்க்க தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுபோல ஆடுகளை தத்தெடுக்க விரும்பும் மக்களிடம் என்ன காரணத்திற்காக தத்தெடுக்கிறார்கள் என்று மட்டும் கேட்கிறார்கள். ஏனெனில் ஆடுகளை இறைச்சிக்காக கொடுப்பதில் அந்த தீவு மக்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளனர். இதன் மூலம் அலிக்குடி தீவில் ஆடுகளை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த தீவின் மேயர் நினைக்கிறார்.