நாட்டுக்கோழி பிரட்டல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.. சுவை ஆளையே மயக்கி விடும்!!
நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.இவற்றில் சில்லி,குழம்பு,கிரேவி, வறுவல் உள்ளிட்ட பல உணவுகளை சமைத்து ருசி பார்த்து வருகிறோம்.இதில் நாட்டுக்கோழியில் சமைக்கப்படும் உணவு மிகவும் சுவையாகவும்,ஆரோக்யமானதாகவும் இருக்கும்.இந்த நாட்டுக்கோழியில் மிகவும் ருசியாகபிரட்டல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி செய்தால் நாட்டுக்கோழி பிரட்டல் மணமாகவும்,மிகவும் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*நாட்டு கோழி – 1/2 கிலோ
*எண்ணெய் – 4 தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் – 25 முதல் 30
*இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
*கொத்தமல்லி தூள் – 3 தேக்கரண்டி
*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*சீரகம் – 1 தேக்கரண்டி
*மிளகு – 1 தேக்கரண்டி
*மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
*தேங்காய் – 1/4 கப் (துருவியது)
*கரம்மசாலா – 1 தேக்கரண்டி
*முந்திரிபருப்பு – 5
*பட்டை – 2 துண்டு
*இலவங்கம் – 2
*கசகசா – 1 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 1 கொத்து
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:-
அடுப்பில் கடாய் வைத்து 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் பட்டை 2 துண்டு,இலவங்கம் 2 சேர்க்கவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழி கறியை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு 3 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,1 தேக்கரண்டி மிளகாய் தூள்,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி கரமசால் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.அடுத்து மிக்ஸி ஜார் எடுத்து அதில்
1/4 கப் துருவிய தேங்காய்,1 தேக்கரண்டி மிளகு,1 தேக்கரண்டி சீரகம்,5 முந்திரி பருப்பு,1 தேக்கரண்டி கசகசா சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி மைய்ய அரைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள இந்த விழுதை கொதிக்கும் கோழிக்கறியில் சேர்த்து நன்கு கிண்டி விடவும்.பச்சை வாசனை முழுவதுமாக நீங்கிய பின் சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.