சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

0
137
3 ஆயிரம் டன் எடை கொண்ட பெட்ரோலை சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது.  யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகில் மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல்  மிகுந்த வேகத்துடன் மோதியது. இந்த சம்பவத்தில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. விபத்தான இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் 15 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மீட்பு பணியில் 3 மாலுமிகள் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டனர் அனால் 14 மாலுமிகள் மாயமாகி இருகின்றனர். நேற்று காலை எண்ணெய் கப்பலில் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. மேலும் மாயமான மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Previous articleமூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை
Next articleரசிகர்களை இப்படியெல்லாம் குஷிப்படுத்திய நடிகை ரம்யா பாண்டியன்!!!