கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Parthipan K

Updated on:

Cruelty happened to a woman walking in Coimbatore district! People in the area in fear!

கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் தெருவை  சேர்ந்தவர் லதா (46). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று லதாவின் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மளிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் வந்துள்ளனர்.

எதிர்பாரத விதமாக அந்த  மர்மநபர்கள் திடீரென லதாவின் கழுத்தில் இருந்த இரண்டு பவன் தங்க சங்கிலியை  பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் லதா அக்கம் பக்கத்தினரை   அழைப்பதற்குள் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காணவில்லை.

மேலும் இதையடுத்து லதா நேற்று செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில்  சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.