கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?..

Photo of author

By Parthipan K

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?..

கடலூர் மாவட்டம் நெய்வேலி சேர்ந்தவர் தனலட்சுமி இவருடைய வயது 75. இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது எனது மகன் என்னிடம் இருந்த இரண்டு பவுன் மற்றும் எனது கணவரின் சேமிப்பு பணமான ஒரு லட்ச ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு என்னை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே துரத்திவுள்ளார் என புகார் அளித்தார்.

இதன் நெய்வேலி டவுன்ஷிப் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். மேலும் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் தனது அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு பவுன் நகை, ஒரு லட்சம் பணம் மற்றும் வீட்டுமனை பத்திரம் ஆகியவற்றை தனது உறவினர்களின் முன்னிலையில் வைத்து அவர்களின் ஆவணங்களை எல்லாம் கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார்.

மேலும் அந்த மூதாட்டி ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டது.பின்னர் அங்கிருந்த காவல் துறையினர்  மூதாட்டிக்கு  ஆறுதல் கூறி விட்டு அங்கிருந்து சென்றனர்.