தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..!

0
307
#image_title

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..!

சுற்று சூழல் மாசுபாடு, உணவுமுறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக் கூடிய பொடுகை போக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)வேப்பிலை
3)வெந்தயம்
4)எலுமிச்சை சாறு

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணையாக இருந்தால் இன்னும் நல்லது.

இந்த தேங்காய் எண்ணெயில் 1 ஸ்பூன் வேப்பிலை பொடி சேர்க்கவும். வேப்பிலையை காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். வேப்பிலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வேப்பிலை பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

வேப்பிலை பொடி சேர்த்த பின்னர் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்க்கவும். வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி சேர்க்க வேண்டும்.

இறுதியாக 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த தேங்காய் எண்ணெய் கலவையை முடியின் வேர்காள் பகுதியில் படும்படியாக தடவி சில மணி நேரம் ஊற விடவும்.

பிறகு ஷாம்பு உபயோகித்து தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகுத் தொல்லை முழுமையாக நீங்கும்.

Previous articleஇதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..!
Next articleநீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..!