முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே நாளில் மாயமாக இதை ட்ரை பண்ணுங்க..!!

Photo of author

By Divya

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே நாளில் மாயமாக இதை ட்ரை பண்ணுங்க..!!

இன்றைய நவீன உலகில் அனைவரும் மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். இதனால் கண் தொடர்பான பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதிலும் கருவளையம் வந்து விட்டால் அவை நம் முக அழகை கெடுக்கும் விதமாக மாறிவிடுகிறது. இந்த கருவளையத்தை சரி செய்ய இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*ஆவாரம்பூ பொடி – 2 தேக்கரண்டி

*மைசூர் பருப்பு பொடி – 2 தேக்கரண்டி

*பாதாம் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி

*உருளைக்கிழங்கு – பாதி

செய்முறை…

முதலில் பாதி உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த உருளைக்கிழங்கில் இருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் 2 தேக்கரண்டி ஆவாரம் பூ பொடி, 2 தேக்கரண்டி மைசூர் பருப்பு பொடி, 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

இந்த பேஸ்டை இரவு தூங்குவதற்கு முன் கண்களை சுற்றி அப்ளை செய்து கொள்ளவும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் ஒரு வாரத்தில் கண்களை சுற்றி இருந்த கருவளையம் மறைந்து விடும்.