எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார்
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பொது செயலாளர் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதிலும், பன்னீர்செல்வம் தரப்பினர் விடுவதாக இல்லை, ஏதாவது ஒன்றிணை சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்றனர்.
இந்த பொது செயலாளர் வழக்கில் தானும் போட்டியிட போவதாக பன்னீர்செல்வம் செல்வம் கூறியதை தொடர்ந்து அதிமுகவில் மேலும் பரபரப்பு தொற்றிகொண்டது, இதனிடையே நேற்று தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான விவாத்தில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பன்னீர்செல்வம் பேசுவதற்கு அனுமதி அளித்தார்.
பன்னீர்செல்வம் பேசிமுடிக்கும் பொது அதிமுக சார்பில் என்ற வார்த்தையை பேசியதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனை தொடர்ந்து எடப்பாடி ஆதரவு எம்எல்எவான அரக்கோணம் ரவி மற்றும் அருண்குமார், பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
இந்த வாக்குவதத்தினை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏ ரவி நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரினை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஓபிஎஸ் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வழக்கு தொடுத்துள்ள போது, ஓபிஎஸ் தரப்பினர் எடப்பாடி தரப்பு எம்எல்எவிற்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இதனை தொடர்ந்து எடப்பாடி என்ன செய்ய போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.